Wednesday, July 22, 2020

வீர விளையாட்டு


மிருகக்  கொலை, விலங்குரிமை என சப்பைக்கட்டு 
பல ஆயிரம் காரணம் சொல்லலாம் நீ இன்று 
எம் குல அடையாளமாம் 
எம் வீர தழுவலாம் 
எம் ஜல்லிக்கட்டு !

கட்டுண்டு போக பேடி என நினைத்தாயோ ?
சிதறுண்டு போக சிற்றெறும்பு கூட்டமென எக்களித்தாயோ?

எம் பாட்டன், முப்பாட்டன் முதற்கொண்டு 
மார் தட்டி, வீறு கொண்டு 
வீரத்தை பறைசாற்றிய 
விளையாட்டாம் எம் ஜல்லிக்கட்டு!

நெஞ்சை நிமிர்த்தி, நரம்பு புடைக்க 
மொழித் திமிரை விழியில் பூண்டு 
நம் மண் புகட்டிய ஆணவத்தை கொண்டு 
தறி கெட்டு ஓடச் செய் - 
அம்மாட்டையும், இந்நாட்டை நாறடிக்கும் 
சில சாக்கடைகளையும்...

வேட்டியை கட்டி, பேடியை விரட்ட 
வீறு கொண்டு நீ ஆடு 
ஜல்லிக்கட்டு !!!




அனைத்தும் சரி

தற்பெருமையும் தன்னடக்கம்தான் - அது 
தன் பேறுக்காய் இருக்கும்வரை...

அழகிய செருக்கும் பெருமைதான் 
அளவுக்கதிகமாய் ஆகும்வரை...

ஊர் போற்றும் நட்பும் நஞ்சாகும் 
உரிய நபர் தவறாய் இருப்பின் 

தோல்வியும் கல்வியாகும் - அது 
வெற்றியின் முதற்படியாய்  ஆகும் தருணம்.

மு ற் று ப் பு ள் ளி .


முடிவில்லா காவியத்தில் அழகேது ?
முதுமையேறிய வீரத்தில் செருக்கேது ?
சாகவரத்தில் சுகமேது ?

இலையுதிர் காலம், கண்ணகியின் கோபம்,
இளமையில் காதல் , முதுமையில் சாதல் - என 
வாழ்கையை மெருகேற்றுவதென்னவோ  முற்றுப்புள்ளிதானே !

வாழ்வில் நிலைத்தன்மையை தேடும் பேதையரே  
அறியுங்கள் - முடிவென்று ஒன்று இருக்கும்வரைதான் அனைத்தும் அழகு 
வாழுங்கள் இன்றே உங்கள் கடைசி பக்கம் என்று ...

A moment of Silence

A moment of Silence

Gone are the rationales
Buried those staunch Idealists
Right and wrong - No longer prevails
Life treads on a thin line

We tolerate... We co-exist... We survive...
Balancing as we go by
A moment of silence to the Rationales!!!