முடிவில்லா காவியத்தில் அழகேது ?
முதுமையேறிய வீரத்தில் செருக்கேது ?
சாகவரத்தில் சுகமேது ?
இலையுதிர் காலம், கண்ணகியின் கோபம்,
இளமையில் காதல் , முதுமையில் சாதல் - என
வாழ்கையை மெருகேற்றுவதென்னவோ முற்றுப்புள்ளிதானே !
வாழ்வில் நிலைத்தன்மையை தேடும் பேதையரே
அறியுங்கள் - முடிவென்று ஒன்று இருக்கும்வரைதான் அனைத்தும் அழகு
வாழுங்கள் இன்றே உங்கள் கடைசி பக்கம் என்று ...
No comments:
Post a Comment