Wednesday, July 22, 2020

வீர விளையாட்டு


மிருகக்  கொலை, விலங்குரிமை என சப்பைக்கட்டு 
பல ஆயிரம் காரணம் சொல்லலாம் நீ இன்று 
எம் குல அடையாளமாம் 
எம் வீர தழுவலாம் 
எம் ஜல்லிக்கட்டு !

கட்டுண்டு போக பேடி என நினைத்தாயோ ?
சிதறுண்டு போக சிற்றெறும்பு கூட்டமென எக்களித்தாயோ?

எம் பாட்டன், முப்பாட்டன் முதற்கொண்டு 
மார் தட்டி, வீறு கொண்டு 
வீரத்தை பறைசாற்றிய 
விளையாட்டாம் எம் ஜல்லிக்கட்டு!

நெஞ்சை நிமிர்த்தி, நரம்பு புடைக்க 
மொழித் திமிரை விழியில் பூண்டு 
நம் மண் புகட்டிய ஆணவத்தை கொண்டு 
தறி கெட்டு ஓடச் செய் - 
அம்மாட்டையும், இந்நாட்டை நாறடிக்கும் 
சில சாக்கடைகளையும்...

வேட்டியை கட்டி, பேடியை விரட்ட 
வீறு கொண்டு நீ ஆடு 
ஜல்லிக்கட்டு !!!




No comments: